இடுகைகள்

2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஞாபகங்கள்

சில கதைகள் எழுதபடுகின்றன. ஒரு சில கதைகள் தாமாகவே தங்களை எழுதிக் கொள்கின்றன. இந்த இரண்டாம் இரகத்தைச் சேர்ந்ததுதான் இக்கதை. ஆகையால் இந்த கதைக்கு எப்படி முன்னுரை எழுதுவது என எனக்கு புரியவில்லை. இருந்த போதிலும் ஒரு சில வார்த்தைகள்..... என்னுடைய‌ ம‌ருத்துவ‌ க‌ல்லூரியின் கால‌த்தில் போது உருவான‌ க‌தை இது. பெண்மையும் தாய்மையும் ஆண்களுக்குச் சுயமாக அமையாவிட்டாலும்கூட‌, அதனை உணரும் வல்லமை நிச்சயம் அவர்களுக்கு உண்டு. அந்த உந்துதலின் பேரில், என்னை மீறி எழுதிய‌ க‌தைக‌ளில் இதுவும் ஒன்று. இந்த கதைக்கான பொறி ஒரு கருகலைப்பு சம்பவம். ஆனால் அதன் நிகழ்வும் தாக்கமும் எனது கற்பனையும் கற்பிதங்களையும் தாண்டி, தன்னை ஒரு படிவமாக ஸ்தாபித்து கொண்டன. மாறி வ‌ரும் ச‌மூதாய‌த்தில் க‌ற்புநெறி கோட்பாடுக‌ள் தள‌ர்ந்தும் மாற்ற‌ப்ப‌ட்டும் வ‌ருகின்ற‌ன‌. த‌னிம‌னித‌ அள‌வில் அத‌ன் மாற்ற‌ங்க‌ள் ம‌னித‌ குணாதிச‌ய‌ங்க‌ளை எவ்வாறு பீடிக்கிற‌து என‌ப‌தை கோடிக் காட்டும் நிக‌ழ்வுதான் இக்க‌தை. இவ்வாறு மாறி வ‌ரும் ச‌முக‌த்தின் மாறா பொருளாக‌ தாய்மை விள‌ங்குவதை ம‌றுத‌லிக்க‌ இய‌லாது. அந்த மாறாபொருளைத் தன‌து துன்பவியல் தடயத்தில் பேசுகிறது இக்க...

தொடுவானம்

என்னுடைய நான்காண்டுகால லண்டன் வாசத்தில், ஏதாவது தமிழில் எழுத வேண்டும் என எண்ணி, வலிய வரைந்த கதை இது. இந்த கதை பெண்ணியத்தைப் பற்றி பேசினாலும், பெண்களுக்கான அடிப்படைப் பிரச்சனைகளின் ஆதாரம் ஆண்களின் ஆதிக்க மனபாண்மை என்பதை மறுக்க முடியாது. பெண்கள் பெண்களுக்காக எழுதுவது ஆச்சரியம் இல்லைதான். அது இயல்பு. அதுவே ஆணாக இருக்கும் பட்சத்தில், ஆண்கள் பெண்ணியத்தைத் தொடும்போது, பரிவும், பதைபதைப்பும், சற்று கூடுதலான அக்கறையும் இருக்கும் என நம்புகிறேன். ஏன்னா இன்னைக்கு இருக்கும் Gynaecologist ‍list- இல் (பெண்மை பிணியியல் மற்றும் மகப் பேறு நிபுணர்கள்) பெரும்பான்மை ஆண்களே வகிக்கிறார்கள். இது ஆண்கள், பெண்களின்பால் வைத்திருக்கும் இயற்கையான பற்றுதலையும் பரிவையும் புரிய வைக்கிறது. ஒர் ஆண்ணென்ற‌ அறிதலின் பேரில் பெண்க‌ளைப் ப‌ற்றி புரிந்துக் கொள்ள‌ நான் எடுத்துக் கொண்ட‌ முத‌ல் முய‌ற்சி. பின்குறிப்பு: இந்த கதை 2003-ஆம் ஆண்டு மக்கள் ஓசையில் வெளியீடு கண்டது ந‌ன்றி சினேக‌முட‌ன் ஆர்.இராஜேஸ் ------------------------------------------------------------------------------- லண்டன் ஹீத்தூரோ விமான நிலையத்தில், தனது முதல் கா...

கலையாத கனவுகள்

என்னுடைய பதிம வயதில் எழுதிய கதை இது. நிஜம் முக்காலும் கற்பனை காலும் சேர்ந்த கலவை. தோட்டபுற வாழ்வியலில், உயர்வைக் காண விழையும் ஒரு சிறுவனின் அவஸ்தையும், அவனது பெற்றோர்களின் ஆவலாதியும்தான் இந்த கதையின் சாராம்சம். எட்டு வருடங்களுக்கு பிறகு, இந்த கதையை நானே ஒப்பிட்டு பார்க்கிறபோது, இது வெகு சாதாரண கதையாகவும் சம்பவங்களின் தொகுப்பாக இருந்தபோதிலும், இதில் ஆவணப்படுத்தபடும் தோட்ட மக்களின் சிக்கல் மிகுந்த அன்றாட நிலையைச் சுட்டிக் காட்டவே இதனை மீண்டும் உங்கள் பார்வைக்குத் தருகிறேன். இது வெறும் கதை மட்டிலும் அல்ல, ஒரு தோட்ட பாட்டாளி மகனின் நிதர்சன வாழ்க்கையும் கூட‌. பின் குறிப்பு:‍‍‍ 1999 ஆண்டின் மலேசிய தேசிய ப‌ல்கலைகழக (UKM) தமிழ் சிறுகதை போட்டியில், இந்த கதை முதல் பரிசை வென்றுள்ளது. நன்றி சினேகமுடன் ஆர்.இராஜேஸ் ----------------------------------------------------------------------------------------- இதயத்தின் லப் டப் ஓசை வினாடிக்கு ஒரு தரம் அதிகரித்துக் கொண்டே போனது. உடலெங்கும் ஒரு மின்சார அலை ஊர்வது போன்று உதறத் தொடங்கியது. நேற்றைய இரவு, எட்டு மணி செய்தியை வானோலியில் கேட்டதில் இருந்து, மனது...