இடுகைகள்

பிப்ரவரி, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாகலீலை தோட்டம் (Nagalilit or Nagalelai Estate)

நாகலீலை தோட்டம் (Nagalilit Estate or Nagalelai Estate) இதுவும் என்னுடைய சுய பிரஸ்தாபம்தான். ஆனால் இங்கு பிரதாபிக்க போவது என்னை பற்றியல்ல. என்னுள் சலனமற்ற நதியாய் ஒடிக்கொண்டிருக்கும் எனது தோட்டபுற வாழ்வின் நினைவுகளைப் படமாய் வரைய முனைகிறேன். தோட்டகாடுகள் மடிந்து, அங்கு புதுபுது வீடமைப்பு திட்டங்கள் முளைப்பது, தொழிற்சாலைகள் உருவாகுவது ஒரு சாதாரண விஷயம்தான். நலிந்துபோன தோட்ட வாழ்க்கையிலிருந்து மீள முடியாத ஜென்மங்களும், வெகு தூரம் பிரிந்து போயினும் தோட்ட வாழ்க்கையின் தாக்கத்தை மறக்காத மனிதர்களின் மன துயரங்கள் வெகு சுலபமாய், சர்வ சாதாரணமாய் ஜீரணிக்கபடுவதில்லை. அந்த துயரகங்கின் ஒரு பொறிதான் என்னை இங்கு எழுத வைத்திருக்கிறது. எத்தனையோ வருடங்கள், இந்திய பால்மர குடியேறிகளுக்குச் சொர்க்க பூமியாய் இருந்த இந்த புண்ணிய பூமி, காலத்தின் மாற்றத்தால் உருவிழந்து போன கதையைதான் இங்கு பேச போகிறேன். பேசப்படும் கதை ஒன்றாக இருந்த போதிலும், இதனுள் பேசாத, அறியாத கதைகளும் நிறைய நிறையவே உள்ளன. அவற்றையெல்லாம் எழுத ஒரு சகாப்தம் போதாது. ஏதோ எனது சொற்ப அறிவிற்கு எட்டியதை, பேசக் கேட்டு அறிந்ததை, பட்டு புரிந்ததை உங்களு...