இடுகைகள்

படம்
சிறுகதை வாசகப் பார்வை  மறைந்து திரியும் கிழவன் -சுரேஷ்குமார் இந்திரஜித் “Take things for granted” அப்படி ஒரு சொல்லாடல் ஆங்கிலதில் உண்டு. நமக்கு கிடைத்தப் பொக்கிஷத்தை , அதன் உச்சங்களை உணராது , போகிற போக்கில் சாதரணமாய் எடுத்துக் கொள்வது. இன்றைய தலைமுறையினரின் ஒரு சாபம் போலும் , அப்பன் சொத்தைக் குந்தி தின்னத்தான் முடிகிறதே தவிர , அதனைச் சம்பாதிக்க அந்த தகப்பன் கண்டுய்த்த வேதனைகளும் வலிகளும் தெரிவதேயில்லை.  அப்படி ஒரு வெறுமையை , மனிதர்கள் கடத்தாத அனுபவங்களை இச்சிறுகதை அதன் போக்கில் சொல்கிறது. வாழ்க்கை கால வர்த்தமானங்களின்படி எவ்வாறு வேறுப்பட்டிருக்கிறது என்பதை இகதையின் வாயிலாக உணர முடிகிறது. சுதந்திர வேட்கையின் உச்சத்தில் , தன்னைக் காவு கொடுத்த கிழவனையும் அவனது சகாக்களும் ஒரு புறத்தில் இருக்க , மறுபுறத்தில் இந்த சுதந்திரம் கொடுத்த இறுமாப்பில் , அயிரை மீனும் கள்ளும் குடித்து களி இன்பம் காணும் வாழ்க்கையும் , தற்கால மனிதர்களின் மீதான கேள்விகளை எழுப்புகிறது. ஒரே திரையில் , இரு விதமான வாழ்க்கைகள் . இந்த இரண்டு வாழ்க்கைகளுக்கான முடிச்சு அவிழ்ந்து , இரண்டும் தனி தனியே வேறுப்...

புனர்ஜென்மம்

படம்
இன்றைக்கு என்னவென்றே தெரியவில்லை , மூளைக்குள் ஒருவித மாசி படிந்த தூக்கமும் , கண்களில் சொல்லதெரியாத வெறுமையும் குடிக் கொண்டிருப்பதாக எனக்கு தெரிகிறது. நடக்கும் நடையில் ஒ ர் ஒழுங்கில்லை , மனதுக்குள் சதா ஓடிக்கொண்டிருக்கும் உருதெரியாத பிம்பங்க ளா ய் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இரவு எட்டு மணிக்கு  என்னைப் பார்ப்பதற்கு வருதாக சொன்ன டேனியலில் முகம் , சமய சந்தர்ப்பம் தெரியாமல் என் நினைவுக்கு வருகிறது. அவனைப் பற்றிய எந்த ஒரு உருவகமும் எனது மனதில் இல்லாவிட்டாலும் கூட , ஏதோ ஒரு வகையில் அவனது அருகாமை எனக்கு சற்று இதத்தைத் தருக்கிறது , காயும் பாலை நிலத்தில் குளிர் கா ற்று லேசாய் தீண்டுவது போல். ஆனால் , எல்லா உறவுகளூம் தென்றலாய் , இளங்குளிராய் இருப்பதில்லையே. ஏனோ இந்நேரத்தில் எனக்கு வாசுவின் முகம் தானாக நினைவிற்கு வரு கி றது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த அந்த முகத்தை இன்னும் என்னால் மறக்க இயலவில்லை. முகம் என்று சொல்வதை விட அவனது ஸ்பரிச பிரயோகங்கள்தான் எனது உடலை ச் சிலிர்க்கவைக்கின்றன. மனிதர்களை முகங்களாய் அடையாளப்படுத்தும் காலத்தை க் கடந்து , அவர்கள் விட்டு சென்ற நின...

நாவலுக்கான விசைமுகம்

படம்
முதல் விசை தேனடையாய், பல உள் விரிவாக்கங்களால் புடைத்து விம்மிக் கொண்டிருக்கும் சமுகத்தில், இருண்ட பிரதேசங்கள் நிறையவே உண்டு. மாபியா, இலுமினாட்டி, பால் திரிபு கட்டமைப்புகள், கள்ளக்கடத்தல், தீவிரவாதம் என இந்த மாயா உலகங்களின் பட்டியல் காலதேச வர்த்தமானத்தின்படி நீண்டு கொண்டுதான் செல்கிறது. இந்த இருண்ட உலகங்களின் இருப்பு மண்ணில் மறைந்து துளிர் விடும் பச்சையாய், ஆழ சமுத்திரத்தின் பிரம்மாண்டமான ஆக்டோபஸ் கால்களின் நீட்சியாய், யதார்த்த உலகை மாய வலையில் சிக்கவைத்து, சமூக பிரக்ஞையில் வலுவாய் அமர்ந்துள்ளது. இந்த தனிப்பட்ட உலகங்கங்களில் இருந்து விலகி, சமூகத்தின் அக்கறைக்கு இலக்காகாத, இன்னும் தன் இருப்பை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாத ஓர் உலகமாய், ஒரு பிரிவு இருந்தும் இல்லாமலும், புரிந்தும் புரியாமாலும் இயங்கிக் கொண்டுதான் வருகிறது. பால்திரிபினர் என அறியப்படும் திருநம்பிகளின் உலகம். சிலுவையென பெண்ணுடலில் சிறைப்பட்ட ஆண்களின் ஆத்மாக்கள் ஆரோகணிக்கும் உலகம். ஆணாதிக்கம் மிகுந்த உலகத்தின் பிடியில் இயங்கும் சமுக ஏடுகளில், இன்னும் தெளிவாய் பதியப்படாத ஒர் இருண்ட உலகம்.  திருநம்பிகளைப் பற்றிய நமது அறிதலும் அறி...

நாகலீலைத் தோட்டம் (2)

அந்த நாட்களில் உடுத்த சரியான உடை கிடையாது, நாகரீகம் சற்று தூர நின்று எட்டி பார்க்கும் கால வெளியில், மனதின் குதூகலத்திற்கு அளவே கிடையாது. வெறும் கித்தா மர கொட்டைகளை வைத்து கோலி விளையாடிய போது முகிழ்ந்த முழுமையும் உள்ள களிப்பும் இப்போது ஸ்நோ போவ்லிங் உருட்டும் உவகையில் இல்லை. கண்ணாடிகுஞ்சு சிறுமீன்களைப் பிடிக்க மாட்டு அட்டைகள் நிறைந்த ஓடைகளில் உருண்டு பிரண்டதும், மீன்குஞ்சுகள் என எண்ணி தலைப்பிரட்டைகளைக் கொண்டு போய் ஏமாந்து நின்றது, இன்று சன்வே லகூனில் நீர் சறுக்கு பலகை எனக்கு தரவில்லை. நாகலீலைத் தோட்டத்தில் மிக முக்கியமாய் எல்லா சுற்று புற பொடுசுகளும் அறிந்தது 21ஆம் நம்பர் ஆறு. பெயர் சற்று வித்தியாசமாக இருந்தாலும், 21ஆம் நம்பர் இரப்பர் நிறையின் (பகுதியில்) ஊடாக அந்த தெளிந்த ஆறு இருந்ததால் ஏற்பட்ட நாமகரணமே அது. ஸ்படிகமாய் ஓடும் அந்த நதியின் அடியில் புரளும் வெள்ளை மணல் சிறு மேடுகளைத் துல்லியமாய் காணலாம். பருவங்களுக்குத் தகுந்தபடி மாறும் அதன் உள்ளாழங்களும், வட்ட வட்ட நீர் சுழிப்பும், அடியாழத்தில் நிரடி கொண்டிருக்கும் காய்ந்த இரப்பர் மர இலைகளும், உச்சி வரை சில்லிடவைக்கும் தட்பமும் வேறு எங்...

என்றென்றும் அன்புடன்

கதையைப் பற்றி ஒரு கண்ணோட்டம் நான் எழுத பழகிய காலகட்டங்களில் புனையப்பட்ட கதையிது. இதனுடைய இலக்கிய வளமை எப்படி இருக்கும் என தெரியாமல், அந்த பதிம வயதில், என்னை வெகுவாக பாதித்த விஷயங்களைக் கதைகளாக உருமாற்ற முனைந்திருக்கிறேன், இன்றைய துரித உலகில் இணையம், ஐ-போன் என்று மூழ்கிவிட்ட பிரகிதிகளுக்கு, 15-20 வருடங்களுக்கு முந்தைய தொலைதொடர்பு சாதனாமான கடித வரைதலும், அதற்கான காத்திருப்பும் புரியுமா என தெரியவில்லை. தோட்டபுற இறுக்கங்களிலிருந்து விடுபட்டு, சுயமாக தொழிற்பேட்டைகளில் வேலை செய்ய தொடங்கிய, ஓரளவு படித்த, இலக்கிய ஆர்வமுள்ள பெண்கள் அப்போது எதிர்நோக்கிய ஒரு பிரச்சனைதான் இதுவும். மாத சஞ்சிகைகளிம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பேனா நட்பு பெண்களின் மனமுதிர்ச்சியை விரிவாக்கிய போதிலும், சமூகம் மற்றும் ஒழுக்க விதிகளில் அது உண்டுபண்ணியத் தாக்கங்கள்தான் இந்த கதையின் பொறி. சினேகமுடன் இராஜேஸ் இராமசாமி --------------------------------------------------------------------------------- "இதோ பாருடி, நீ சொல்லறது கதைக்கும் காவியத்துக்கும்தான் வக்கணையா இருக்கும். மனுசியா உலகத்துல பொறந்துட்டா நாலு பேருக்கும், ஊர...

வீணையடி நீ எனக்கு

இவ்வளவு அருகில், அவரை இப்போதுதான் நிமிர்ந்து பார்க்கிறேன். ஓம குண்டத்திலிருந்து புகைந்து வரும் நெடி புகையின் வாயிலாக அவரை, அவர்தான் கோபியை, இன்னும் சில நொடி பொழுதுகளின் எனது பெண்மைக்கு ஒட்டுமொத்த உரிமையாளனாக போகும் எனது கணவனை, அந்த கணம்தான் அவ்வளவு அருகில் இருந்து பார்க்கிறேன். மணபெண் என்கிற கூச்சநாச்சமெல்லாம் கடந்து போன பருவத்தில், அவரை அப்படி பார்ப்பதில் எனக்கு கொஞ்சம் கூட லஜ்ஜையோ நாணமோ இல்லை. இந்த முப்பத்தியாறு வயதில் என்னையொத்த பெண்களெல்லாம் நிறைந்த சுமங்கலியாய், இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் வளைய வரும் போது, இன்னும் நான் மட்டுமே புதுபெண்ணாய்! இருந்தபோதிலும், பெண்மைக்கான உணர்வுகளையெல்லாம் தொலைந்து அதிக நாளாயிற்று என எனது நாள்பட்ட மாதவிலக்கே சொல்லாமல் சொல்லியது. அது என்னவோ, என்னால் இந்த வயதிலும்கூட மிகைப்பட்ட உணர்வுகளோடு இணைந்திருக்க முடியவில்லை. அம்மா மணவறையின் ஓரத்தில், யாருக்கும் புலப்படாமல் மறைந்து தனது அமங்கலி கோலம் தனது மகளின் மங்கல நாளை மாசுபடுத்த கூடாதென்று மருகி, கண்களில் நீரைச் சுமந்து கொண்டிருக்கிறாள். அவளது உதிரத்தில் உதித்த மற்ற பெண்கள், என்னை விடவும் வயதில் இளைய ச...

நாகலீலை தோட்டம் (Nagalilit or Nagalelai Estate)

நாகலீலை தோட்டம் (Nagalilit Estate or Nagalelai Estate) இதுவும் என்னுடைய சுய பிரஸ்தாபம்தான். ஆனால் இங்கு பிரதாபிக்க போவது என்னை பற்றியல்ல. என்னுள் சலனமற்ற நதியாய் ஒடிக்கொண்டிருக்கும் எனது தோட்டபுற வாழ்வின் நினைவுகளைப் படமாய் வரைய முனைகிறேன். தோட்டகாடுகள் மடிந்து, அங்கு புதுபுது வீடமைப்பு திட்டங்கள் முளைப்பது, தொழிற்சாலைகள் உருவாகுவது ஒரு சாதாரண விஷயம்தான். நலிந்துபோன தோட்ட வாழ்க்கையிலிருந்து மீள முடியாத ஜென்மங்களும், வெகு தூரம் பிரிந்து போயினும் தோட்ட வாழ்க்கையின் தாக்கத்தை மறக்காத மனிதர்களின் மன துயரங்கள் வெகு சுலபமாய், சர்வ சாதாரணமாய் ஜீரணிக்கபடுவதில்லை. அந்த துயரகங்கின் ஒரு பொறிதான் என்னை இங்கு எழுத வைத்திருக்கிறது. எத்தனையோ வருடங்கள், இந்திய பால்மர குடியேறிகளுக்குச் சொர்க்க பூமியாய் இருந்த இந்த புண்ணிய பூமி, காலத்தின் மாற்றத்தால் உருவிழந்து போன கதையைதான் இங்கு பேச போகிறேன். பேசப்படும் கதை ஒன்றாக இருந்த போதிலும், இதனுள் பேசாத, அறியாத கதைகளும் நிறைய நிறையவே உள்ளன. அவற்றையெல்லாம் எழுத ஒரு சகாப்தம் போதாது. ஏதோ எனது சொற்ப அறிவிற்கு எட்டியதை, பேசக் கேட்டு அறிந்ததை, பட்டு புரிந்ததை உங்களு...