இடுகைகள்

எஸ்டேட் கதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாகலீலைத் தோட்டம் (2)

அந்த நாட்களில் உடுத்த சரியான உடை கிடையாது, நாகரீகம் சற்று தூர நின்று எட்டி பார்க்கும் கால வெளியில், மனதின் குதூகலத்திற்கு அளவே கிடையாது. வெறும் கித்தா மர கொட்டைகளை வைத்து கோலி விளையாடிய போது முகிழ்ந்த முழுமையும் உள்ள களிப்பும் இப்போது ஸ்நோ போவ்லிங் உருட்டும் உவகையில் இல்லை. கண்ணாடிகுஞ்சு சிறுமீன்களைப் பிடிக்க மாட்டு அட்டைகள் நிறைந்த ஓடைகளில் உருண்டு பிரண்டதும், மீன்குஞ்சுகள் என எண்ணி தலைப்பிரட்டைகளைக் கொண்டு போய் ஏமாந்து நின்றது, இன்று சன்வே லகூனில் நீர் சறுக்கு பலகை எனக்கு தரவில்லை. நாகலீலைத் தோட்டத்தில் மிக முக்கியமாய் எல்லா சுற்று புற பொடுசுகளும் அறிந்தது 21ஆம் நம்பர் ஆறு. பெயர் சற்று வித்தியாசமாக இருந்தாலும், 21ஆம் நம்பர் இரப்பர் நிறையின் (பகுதியில்) ஊடாக அந்த தெளிந்த ஆறு இருந்ததால் ஏற்பட்ட நாமகரணமே அது. ஸ்படிகமாய் ஓடும் அந்த நதியின் அடியில் புரளும் வெள்ளை மணல் சிறு மேடுகளைத் துல்லியமாய் காணலாம். பருவங்களுக்குத் தகுந்தபடி மாறும் அதன் உள்ளாழங்களும், வட்ட வட்ட நீர் சுழிப்பும், அடியாழத்தில் நிரடி கொண்டிருக்கும் காய்ந்த இரப்பர் மர இலைகளும், உச்சி வரை சில்லிடவைக்கும் தட்பமும் வேறு எங்...

கலையாத கனவுகள்

என்னுடைய பதிம வயதில் எழுதிய கதை இது. நிஜம் முக்காலும் கற்பனை காலும் சேர்ந்த கலவை. தோட்டபுற வாழ்வியலில், உயர்வைக் காண விழையும் ஒரு சிறுவனின் அவஸ்தையும், அவனது பெற்றோர்களின் ஆவலாதியும்தான் இந்த கதையின் சாராம்சம். எட்டு வருடங்களுக்கு பிறகு, இந்த கதையை நானே ஒப்பிட்டு பார்க்கிறபோது, இது வெகு சாதாரண கதையாகவும் சம்பவங்களின் தொகுப்பாக இருந்தபோதிலும், இதில் ஆவணப்படுத்தபடும் தோட்ட மக்களின் சிக்கல் மிகுந்த அன்றாட நிலையைச் சுட்டிக் காட்டவே இதனை மீண்டும் உங்கள் பார்வைக்குத் தருகிறேன். இது வெறும் கதை மட்டிலும் அல்ல, ஒரு தோட்ட பாட்டாளி மகனின் நிதர்சன வாழ்க்கையும் கூட‌. பின் குறிப்பு:‍‍‍ 1999 ஆண்டின் மலேசிய தேசிய ப‌ல்கலைகழக (UKM) தமிழ் சிறுகதை போட்டியில், இந்த கதை முதல் பரிசை வென்றுள்ளது. நன்றி சினேகமுடன் ஆர்.இராஜேஸ் ----------------------------------------------------------------------------------------- இதயத்தின் லப் டப் ஓசை வினாடிக்கு ஒரு தரம் அதிகரித்துக் கொண்டே போனது. உடலெங்கும் ஒரு மின்சார அலை ஊர்வது போன்று உதறத் தொடங்கியது. நேற்றைய இரவு, எட்டு மணி செய்தியை வானோலியில் கேட்டதில் இருந்து, மனது...