ஞாபகங்கள்
சில கதைகள் எழுதபடுகின்றன. ஒரு சில கதைகள் தாமாகவே தங்களை எழுதிக் கொள்கின்றன. இந்த இரண்டாம் இரகத்தைச் சேர்ந்ததுதான் இக்கதை. ஆகையால் இந்த கதைக்கு எப்படி முன்னுரை எழுதுவது என எனக்கு புரியவில்லை. இருந்த போதிலும் ஒரு சில வார்த்தைகள்..... என்னுடைய மருத்துவ கல்லூரியின் காலத்தில் போது உருவான கதை இது. பெண்மையும் தாய்மையும் ஆண்களுக்குச் சுயமாக அமையாவிட்டாலும்கூட, அதனை உணரும் வல்லமை நிச்சயம் அவர்களுக்கு உண்டு. அந்த உந்துதலின் பேரில், என்னை மீறி எழுதிய கதைகளில் இதுவும் ஒன்று. இந்த கதைக்கான பொறி ஒரு கருகலைப்பு சம்பவம். ஆனால் அதன் நிகழ்வும் தாக்கமும் எனது கற்பனையும் கற்பிதங்களையும் தாண்டி, தன்னை ஒரு படிவமாக ஸ்தாபித்து கொண்டன. மாறி வரும் சமூதாயத்தில் கற்புநெறி கோட்பாடுகள் தளர்ந்தும் மாற்றப்பட்டும் வருகின்றன. தனிமனித அளவில் அதன் மாற்றங்கள் மனித குணாதிசயங்களை எவ்வாறு பீடிக்கிறது எனபதை கோடிக் காட்டும் நிகழ்வுதான் இக்கதை. இவ்வாறு மாறி வரும் சமுகத்தின் மாறா பொருளாக தாய்மை விளங்குவதை மறுதலிக்க இயலாது. அந்த மாறாபொருளைத் தனது துன்பவியல் தடயத்தில் பேசுகிறது இக்க...