சிறுகதை வாசகப் பார்வை 


மறைந்து திரியும் கிழவன்
-சுரேஷ்குமார் இந்திரஜித்

“Take things for granted” அப்படி ஒரு சொல்லாடல் ஆங்கிலதில் உண்டு. நமக்கு கிடைத்தப் பொக்கிஷத்தை, அதன் உச்சங்களை உணராது, போகிற போக்கில் சாதரணமாய் எடுத்துக் கொள்வது. இன்றைய தலைமுறையினரின் ஒரு சாபம் போலும், அப்பன் சொத்தைக் குந்தி தின்னத்தான் முடிகிறதே தவிர, அதனைச் சம்பாதிக்க அந்த தகப்பன் கண்டுய்த்த வேதனைகளும் வலிகளும் தெரிவதேயில்லை.  அப்படி ஒரு வெறுமையை, மனிதர்கள் கடத்தாத அனுபவங்களை இச்சிறுகதை அதன் போக்கில் சொல்கிறது. வாழ்க்கை கால வர்த்தமானங்களின்படி எவ்வாறு வேறுப்பட்டிருக்கிறது என்பதை இகதையின் வாயிலாக உணர முடிகிறது. சுதந்திர வேட்கையின் உச்சத்தில், தன்னைக் காவு கொடுத்த கிழவனையும் அவனது சகாக்களும் ஒரு புறத்தில் இருக்க, மறுபுறத்தில் இந்த சுதந்திரம் கொடுத்த இறுமாப்பில், அயிரை மீனும் கள்ளும் குடித்து களி இன்பம் காணும் வாழ்க்கையும், தற்கால மனிதர்களின் மீதான கேள்விகளை எழுப்புகிறது. ஒரே திரையில், இரு விதமான வாழ்க்கைகள். இந்த இரண்டு வாழ்க்கைகளுக்கான முடிச்சு அவிழ்ந்து, இரண்டும் தனி தனியே வேறுப்பட்டு நிற்கின்றன. அநத் முடிச்சவிழ்ந்த வாழ்க்கைகளின் நீட்சியை மிச்சத்தை உணர்வு வயமாகப் பார்க்க முடிகிறது.

படிப்பதற்கு அமானுஷ்யமான கதையாகத் தோற்றமளித்தாலும், கிழவனின் மறைவையும், சாலையோரத்தில் சாவியோடு நிற்கும் மோட்டார் சைக்கிளின் பின்புலத்திற்கும் ஏரணங்கள் சொல்லலாம். அதுவல்ல கதை. அந்த கிழவன் தொலைத்த வாழ்வுதான் கதை. அவன் தொலைத்த வாழ்வுதான் இன்று பலருக்கு வாழ்வாதாரமாகியிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாவலுக்கான விசைமுகம்

வீணையடி நீ எனக்கு